இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
6 view
நாட்டில் இன்று (10) மழையற்ற சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 25-35 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். கடலின் தன்மை காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும்போது அந்த கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் பலத்த காற்றுடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post இன்றைய வானிலை முன்னறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய வானிலை முன்னறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
