விமானம் இருந்தால் கொழும்புக்கு செல்லலாம்! பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது – விக்கி எம்.பி.
7 view
நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெறவுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து கொழும்பிற்கு வாகனத்தில் பயணிக்க முடியாதெனவும் விமானம் இருந்தால் கொழும்புக்கு செல்லமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று மணிவண்ணன் மற்றும் விக்கினேஸ்வரனுக்கு இடையில் தீடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் விக்கினேஸ்வரனுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் மணிவண்ணனும் விக்னேஸ்வரனும் இணைந்து இன்று கூட்டாக அறிவித்துள்ளனர்.
The post விமானம் இருந்தால் கொழும்புக்கு செல்லலாம்! பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது – விக்கி எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விமானம் இருந்தால் கொழும்புக்கு செல்லலாம்! பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது – விக்கி எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.