மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி!
6 view
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டுள்ளது. குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
The post மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
