விளக்கு சின்னத்தில் கூட்டணியாக களமிறங்கும் முக்கிய அரசியல்வாதிகள்
6 view
பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு என்ற கூட்டணியின் கீழ் இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்று, டளஸ் அழகபெரும தலைமையில் புதிய கூட்டணி ஒன்று இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறினார். சுதந்திர மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் விளக்கு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, ஜீ.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, அத்துரெலிய ரத்தன தேரர் உள்ளிட்ட பலரது கட்சிகள் விளக்கு சின்னத்தில் இம்முறை தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்
The post விளக்கு சின்னத்தில் கூட்டணியாக களமிறங்கும் முக்கிய அரசியல்வாதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளக்கு சின்னத்தில் கூட்டணியாக களமிறங்கும் முக்கிய அரசியல்வாதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
