சிறிலங்காவின் சவாலான தீர்மானங்கள் – பணவீக்கத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
6 view
சிறிலங்கா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்கள் காரணமாக பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்சியாக பணவீக்கம் குறைந்திருப்பது பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பிரதான பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 61 வீதமாக இருந்த போதிலும் டிசம்பர் மாதம் அது 57.2 வீதமாக குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உணவுப் பணவீக்கமும் நவம்பர் மாதத்தில் 73.7 வீதத்தில் இருந்து டிசம்பர் மாதம் 64.4 வீதமாக குறைந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் 54.5 வீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் டிசம்பர் மாதம் 53.4 வீதமாக குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா மத்திய வங்கியின் இரண்டு…
The post சிறிலங்காவின் சவாலான தீர்மானங்கள் – பணவீக்கத்தில் ஏற்படவுள்ள மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறிலங்காவின் சவாலான தீர்மானங்கள் – பணவீக்கத்தில் ஏற்படவுள்ள மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
