வாகன கட்டண தரிப்பிட குத்தகை இரத்து; யாழ் மாநகர முதல்வர் நடவடிக்கை
17 view
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வாகன தரிப்பிட கட்டணங்களை வசூலிப்பதற்கு, தனியாருக்கு வழங்கப்பட்ட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் முன்பாக, தனது வாகனத்தை நிறுத்தி விட்டு, வர்த்தக நிலையத்திற்கு சென்ற நபரிடம் பின் தொடர்ந்து வர்த்தக நிலையத்தினுள் சென்று, வாகன தரிப்பிட கட்டணத்தை தருமாறு கட்டணம் அறவிட நியமிக்கப்பட்ட நபர் கோரியுள்ளார். அதன் போது, கடையில் பணியாற்றும் நபர்கள், கடைக்குள் வந்த வாடிக்கையாளருக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். அதன் போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து அந்நபர் மேலும் ஒரு கட்டணம் அறவிடும் நபரை கடைக்கு அழைத்து , கடையில் வேலை செய்யும் நபர்களுடன், தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், வீதியில் நின்று தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு முதல்வர் சென்ற வேளை தர்க்கத்தில் ஈடுபட்ட…
The post வாகன கட்டண தரிப்பிட குத்தகை இரத்து; யாழ் மாநகர முதல்வர் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகன கட்டண தரிப்பிட குத்தகை இரத்து; யாழ் மாநகர முதல்வர் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
