யாழ் மாவட்ட அரச அதிபரின் பிரிவுபசார நிகழ்வு!
6 view
யாழ்ப்பாண மாவட்டஅரச அதிபராக கடமையாற்றி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் கணபதிப்பிள்ளை மகேசனின் பிரிவுபசார விழா தற்போது மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது. முன்னதாக கணபதிப்பிள்ளை மகேசன் தம்பதிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதோடு அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் பிரிவுபசார நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் அரச அதிபருக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post யாழ் மாவட்ட அரச அதிபரின் பிரிவுபசார நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாவட்ட அரச அதிபரின் பிரிவுபசார நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
