சற்றுமுன் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்!
6 view
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார் (வயது 100). வயது முதிர்வு காரணமாக கடந்த 28ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இருதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, அவரது தாயார் ஹீராபெனின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாயார் காலமானார் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. The post சற்றுமுன் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post சற்றுமுன் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சற்றுமுன் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
