மைத்திரியின் கட்சியில் ஒருவருக்கு அமைச்சராகும் ஆசை
14 view
“அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க நான் தயாராகவுள்ளேன். எப்போது அந்தப் பதவி கிடைக்கும் என்று தெரியவில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ‘எப்போது அமைச்சராகப் போகின்றீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த வேலையைப் பாரம் கொடுத்தால் இதைச் சரியாகச் செய்வார் என்று ஜனாதிபதி நினைத்து என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதை நான் ஏற்றுக்கொள்வேன். அதற்காகத் தருகின்ற அமைச்சைப் பாரமேற்கமாட்டேன். என்னால் செய்ய முடியும் என்று நான் உணருகின்ற அமைச்சை மட்டுமே பாரமேற்பேன்” – என்றார்.
The post மைத்திரியின் கட்சியில் ஒருவருக்கு அமைச்சராகும் ஆசை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மைத்திரியின் கட்சியில் ஒருவருக்கு அமைச்சராகும் ஆசை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
