அமைச்சுப் பதவியை ஏற்க தயார் – துமிந்த திஸாநாயக்க
6 view
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதவியேற்க தயாராகவுள்ள துமிந்த திஸாநாயக்க ‘எப்போது அமைச்சராகப் போகின்றீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த வேலையைப் பாரம் கொடுத்தால் இதைச் சரியாகச் செய்வார் என்று ஜனாதிபதி நினைத்து என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதை நான் ஏற்றுக்கொள்வேன். அதற்காகத் தருகின்ற அமைச்சைப் பாரமேற்கமாட்டேன். என்னால் செய்ய முடியும் என்று நான் உணருகின்ற அமைச்சை மட்டுமே பாரமேற்பேன்” என தெரிவித்துள்ளார்.
The post அமைச்சுப் பதவியை ஏற்க தயார் – துமிந்த திஸாநாயக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சுப் பதவியை ஏற்க தயார் – துமிந்த திஸாநாயக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
