'பட்ஜட்' மீது இன்று இறுதி வாக்கெடுப்பு!
14 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அதன் பிரகாரம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி திதல் 22 ஆம் திகதி வரையிலான 7 நாள்கள் இடம்பெற்றன. 22 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர். இதில் அரசுடன்…
The post 'பட்ஜட்' மீது இன்று இறுதி வாக்கெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'பட்ஜட்' மீது இன்று இறுதி வாக்கெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
