யாழ்.பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழகம் பீடமாக தரமுயர்வு!

32 view
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக்கழகம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடமாக (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts) தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவினால் கடந்த 16 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டு, அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. இராமநாதன் நுண்கலைக்கழகமானது, 1960 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி முன்னாள் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சு. நடேசபிள்ளையினால், அவரது மாமனாராகிய சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. இராமநாதன் நுண்கலைக்கழகம், இராமநாதன் கல்லூரியுடன் இணைந்ததாக சுன்னாகத்துக்கு சமீபமாக மருதனார்மடத்தில் அமைக்கப்பட்டது. தமிழ் தொல்சீர் இசை, பரதநாட்டியம் என்பவற்றை மேம்பாடடையச் செய்தல், தமிழ் பண்பாட்டுப் பேற்றின் தனித்துவம், அடையாளம் என்பவற்றை மேம்படுத்தல் – பரவச் செய்தல் என்பவற்றினூடாகக் கற்றலுக்கான ஓர் அரணாக அமைந்திருக்க வேண்டுமென்பதே இராமநாதன்…
The post யாழ்.பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழகம் பீடமாக தரமுயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース