செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 27 ஆரம்பம் – வெளியான நடைமுறைகள்!
37 view
வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஒகஸ்ட் 27ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. செப்டம்பர் 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், செப்டம்பர் 6ம் திகதி கைலாச வாகனமும், செப்டம்பர் 8ம் திகதி சப்பறத் திருவிழாவும், செப்டம்பர் 9ம் காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. செப்டம்பர் 10ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11ம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது. செல்வச்சந்நிதி ஆலய மகோற்சவ ஏற்பாட்டு கூட்டம், பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டது. அவையாவன, 1.மகோற்சவ காலத்தில் ஆலயச்சூழலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதனை தடுப்பதற்காக ஆலய பிரதான ஆற்றங்கரை பக்கத்தில் இருக்கின்ற பாதையின் ஊடாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன வாகன தரிப்பிடத்திற்கு செல்ல…
The post செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 27 ஆரம்பம் – வெளியான நடைமுறைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 27 ஆரம்பம் – வெளியான நடைமுறைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
