முல்லைத்தீவு வர்த்தக​ நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை!

31 view
முல்லைத்தீவு – மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் காணப்படும் உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்களில்​ திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சோதனை நடவடிக்கை இன்று (17) பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,பொதுமக்களின் தொடர் முறைப்பாடுகளிற்கமைவாக மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மல்லாவி நகரில் அமைந்துள்ள பல்பொருள் வாணிபங்கள்​ மற்றும் பல்பொருள் அங்காடிகள் மீது திடீர் சோதணையினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது வியாபார நிலையங்களில் காலாவதி திகதி கடந்த உணவுப்பொருட்கள், வண்டு மொய்த்த உணவுப்பொருட்கள், சுட்டுத்துண்டு உருவழிக்கப்பட்ட உணவுப்பொருட்கள், சுட்டுத்துண்டு இடப்படாத வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கென வெளிக்காட்டி வைக்கப்பட்ட​ உணவுப்பொருட்கள் மல்லாவி சுகாதார வைத்திய​ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில்​ ஒப்படைப்பதற்கு​ என சான்றுப்பொருட்களாக மல்லாவி சுகாதார வைத்திய​ அதிகாரி பணிமணைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன. இதேவேளை,பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சுகாதார நடைமுறையின்றி உணவு பொருட்களை​ விற்பனை…
The post முல்லைத்தீவு வர்த்தக​ நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース