இலங்கைக்கு 4 அதிகாரிகள் கொண்ட குழு: தமிழ்நாடு அரசு
13 view
சென்னை, மே 13 இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணிக்கு 4 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி, ரூ. 80 கோடி மதிப்பிலான 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்மா ஆகியவற்றை இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளன. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து பொருட்களை அனுப்பி வைக்க குறித்த குழுவினர் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், இந்த மாதம் இறுதிக்குள் பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசியைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து…
The post இலங்கைக்கு 4 அதிகாரிகள் கொண்ட குழு: தமிழ்நாடு அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு 4 அதிகாரிகள் கொண்ட குழு: தமிழ்நாடு அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
