வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு கொரோனா உறுதி: நாடு முழுவதும் ஊரடங்கு அமல்
49 view
பியாங்யாங்,மே 12 சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 90 லட்சத்து 3 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் தப்பவில்லை. எனினும், ஒரு சில நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்தவில்லை. வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்படவேயில்லை என அரசு தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில், அந்நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா…
The post வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு கொரோனா உறுதி: நாடு முழுவதும் ஊரடங்கு அமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு கொரோனா உறுதி: நாடு முழுவதும் ஊரடங்கு அமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
