12 இந்திய மீனவர்கள் விடுதலை

15 view
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது​ செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள்​ தொடர்பான வழக்கு வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான்​ பி.ஆர்​ இஸ்மாத் ஜெமில் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்து. இதன்போது​ 12 இந்திய மீனவர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தமை,​ ​ இழுவை மடி வலைகளை உடைமையில்​ வைத்திருந்தமை​, இழுவை மடி வலைகைளை பயன்படுத்தி தொழில் மேற்கொண்டமை​ ஆகிய​ மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனையை விதித்து விடுதலை செய்தார். அத்துடன் படகு உரிமம் தொடர்பிலான விளக்கத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது​. ​ இதே நேரம் வழமை போன்று​ இன்று வியாழக்கிழமை இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றில் சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post 12 இந்திய மீனவர்கள் விடுதலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース