நாட்டில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு அமுலில் – அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி!
29 view
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிவரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து தொடர்ந்தும் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களால் இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை காலை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. பணிக்கான அடையாள அட்டையினை பயன்படுத்தி குறித்த சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியிருந்தனர். கொழும்பு அலரி மாளிகையில் நேற்று முன்தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததை அடுத்து ஸ்ரீலங்கா…
The post நாட்டில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு அமுலில் – அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு அமுலில் – அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
