சகோதரர்களின் கருத்திற்கு பதிலாக மக்கள் கருத்திற்கு முன்னுரிமையளித்திருந்தால் இந்த அவலநிலை ஏற்பட்டிருக்காது! வாசு
35 view
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு ‘யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக்கொண்டதற்கு’ ஒப்பானது. சகோதரர்களின் கருத்திற்கு முன்னுரிமை வழங்காமல் நாட்டு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்திருந்தால் நாடு தற்போது இவ்வாறான அவலநிலையை எதிர்க்கொண்டிருக்காது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் தற்போது 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கடுமையாக விமர்சிப்பதுடன், தாக்குதல்களையும் முன்னெடுக்கிறார்கள். அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 3 ஆம் திகதி முழு அமைச்சரவையும் பதவி விலகியதுடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்போதே பதவி விலகியிருந்தால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் சற்று தணிந்திருக்கும். பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் மாற்று வழிமுறையில் பதவியை தக்கவைத்துக்கொள்ள அவர்…
The post சகோதரர்களின் கருத்திற்கு பதிலாக மக்கள் கருத்திற்கு முன்னுரிமையளித்திருந்தால் இந்த அவலநிலை ஏற்பட்டிருக்காது! வாசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சகோதரர்களின் கருத்திற்கு பதிலாக மக்கள் கருத்திற்கு முன்னுரிமையளித்திருந்தால் இந்த அவலநிலை ஏற்பட்டிருக்காது! வாசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
