கடலில் நீராட சென்ற மாணவர்கள் மாயம்: ஒருவர் மீட்பு: இருவரை தேடும் பணி தீவிரம்

15 view
3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதுடன், அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுமார் 17 முதல் 18 வரை வயது மதிக்கத்தக்க பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு சிக்கிக்கொண்டதுடன், கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர். வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில் இவ்வாறு கடலில் இழுத்துச் சென்றுள்ளது. இதில் ஒருவர் மீட்கப்பட்டதுடன் ஏனைய இருவரை தேடும் பணியில் கடற்படையினர், கடற்தொழிலாளர்கள், உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். குறித்த அனர்த்தத்தில் மூவரில் ஒருவர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு நண்பர்களும் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.…
The post கடலில் நீராட சென்ற மாணவர்கள் மாயம்: ஒருவர் மீட்பு: இருவரை தேடும் பணி தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース