ரம்புக்கனை சம்பவம்- சாட்சியாளரை அச்சுறுத்தியதோடு, அறிக்கையையும் அழித்துத் திருத்திய பொலிஸார்!
18 view
கேகாலை – ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக பொலிஸார் தாக்கல் செய்த “பீ” அறிக்கையில் சில இடங்கள் அழிக்கப்பட்டிருந்தமை சம்பந்தமாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் நேற்றிரவு கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். ரம்புக்கனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் சம்பந்தமாக காவல்துறையினருக்கு எதிராக சட்டத்தரணிகள் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த போதே குறித்த பொலிஸ் அதிகாரி இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். முறைப்பாட்டாளர்களான சட்டத்தரணிகள், பொலிஸார் தாக்கல் செய்த “பீ.” அறிக்கையில் சில இடங்கள் அழிக்கப்பட்டு திருத்தப்பட்டிருப்பது சம்பந்தமாக நேற்றிரவு கேகாலை நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன் போது பொலிஸார் “ஏ.ஆர்” அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தகவல்களை தாக்கல் செய்திருந்ததுடன் இப்படியான கொலை சம்பந்தமாக “ஏ.ஆர்” அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என சட்டத்தரணிகள் வாதிட்டனர். இதனடிப்படையில், “பீ.” அறிக்கை மூலம்…
The post ரம்புக்கனை சம்பவம்- சாட்சியாளரை அச்சுறுத்தியதோடு, அறிக்கையையும் அழித்துத் திருத்திய பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரம்புக்கனை சம்பவம்- சாட்சியாளரை அச்சுறுத்தியதோடு, அறிக்கையையும் அழித்துத் திருத்திய பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
