சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பங்கேற்க இலங்கை வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்?
7 view
மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளார் என்பதை அவரே தன்னிடம் தொலைபேசி மூலம் உறுதி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அதுதொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை எனவும் சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
The post சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பங்கேற்க இலங்கை வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பங்கேற்க இலங்கை வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
