யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்!
8 view
உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றன. இன்று காலை யாழில் தனியார் விடுதி ஒன்றில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது ஹிந்தி மொழிக் கற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஹிந்தி மொழி சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழ். இந்திய துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
