புதைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தோண்டி பார்க்க அனுமதி!
6 view
கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை தோண்டிப் பார்ப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. குறித்த பகுதியினை தோண்டும் பணி நாளை திங்கட்கிழமை (9) காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவை பெற்றே அவ்விடத்தை தோண்டும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
The post புதைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தோண்டி பார்க்க அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தோண்டி பார்க்க அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
