பேருந்து கட்டணம் குறையுமா? -முக்கிய தீர்மானம் இன்று!

6 view
நேற்றுமுன்தினம் டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்துவது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து. கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதன்படிஇ ரூ.420 ஆக இருந்த ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை ரூ.405 ஆக இருக்கும். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போதுஇ ​​ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி, கடந்த காலப்பகுதியில் டீசல் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதால்இ பஸ் கட்டண திருத்தத்திற்கான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், டீசல் விலை குறைப்பு கட்டணத்தை குறைக்க போதுமானதாக இல்லை என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
The post பேருந்து கட்டணம் குறையுமா? -முக்கிய தீர்மானம் இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース