இலங்கை சரியான திசையிலேயே செல்கிறது – ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம்!
7 view
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவி நிர்வாகியும், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான UNDP பிராந்திய பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா, சமூக அரசியல் அபிவிருத்திக்கான இலங்கையின் திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்தார். இலங்கை சரியான திசையில் மீள்வதை நாங்கள் பாராட்டுகிறோம், என்று தெரிவித்த அவர், UNDP இன் தொடர்ச்சியான உதவியையும் உறுதிப்படுத்தினார். பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (ஜனவரி 3) அலரிமாளிகையில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது கன்னி விக்னராஜா அண்மையில் உதவிச் செயலாளர் நாயகமாக பதவி உயர்வுபெற்றமைக்காக பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அபிவிருத்தி இலக்குகள், பசுமைப் பொருளாதாரம், சமூக ஒற்றுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அவர் இன்று பிரதமரை சந்தித்தார். பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான…
The post இலங்கை சரியான திசையிலேயே செல்கிறது – ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை சரியான திசையிலேயே செல்கிறது – ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
