வடமாகாணத்தில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை!
8 view
வடமாகாணத்தில் அப்பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட உள்ளன. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற அரசின் கருத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் அந்த அமைச்சின் கீழ் மீள்குடியேற்றப் பிரிவுஇ சமூக நீர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நாள் ஒன்றுக்கு 2000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டுள்ளது என்று மீள்குடியேற்றப் பிரிவு தெரிவிக்கிறது. நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிக்கும்…
The post வடமாகாணத்தில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாணத்தில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
