இன்று 11 புகையிரத பயணங்கள் ரத்து
7 view
இலங்கை புகையிரத சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இன்று (02) காலை திட்டமிடப்பட்டிருந்த 11 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இன்றும் 60க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்படலாம் என முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, இன்றையதினம் கணிசமான எண்ணிக்கையிலான புகையிரதகள் இரத்துச் செய்யப்படலாம் என புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி சேனவிரத்ன தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். The post இன்று 11 புகையிரத பயணங்கள் ரத்து appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post இன்று 11 புகையிரத பயணங்கள் ரத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று 11 புகையிரத பயணங்கள் ரத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
