மூதூர் வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி வழங்கி வைப்பு!
15 view
சுகாதார அமைச்சினால் மூதூர் தள வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ள அம்பியூலன்ஸ் வண்டியை உத்தியோகபூர்வமாக கையளித்து வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை மூதூர் தள வைத்தியசாலையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு இவ் அம்பியூலன்ஸ் வண்டியை கையளித்தார். இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையின் நோயாளர் விடுதியையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது . இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்இ கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்இ மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,மூதூர் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
The post மூதூர் வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூர் வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
