சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சீன பதில் தூதர்!
13 view
வடமாகாணத்திற்கு வருகை தந்துள்ள சீன பதில் தூதுவர் ஹூ வோய் தலைமையிலான குழுவினர் சற்றுமுன் யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரிக்கான உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர். பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சீன பதில் தூதுவர் தலைமையிலான குழுவினர் ‘பாண்ட் வாத்திய’ இசையோடு வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. இதன் போது 40 இலட்சம் ரூபா பெறுமதியான மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் ஸ்மாட் வகுப்பறைக்கான உபகரணங்கள் ஆகியவற்றை சீன பதில் தூதுவர் பாடசாலைச் சமூகத்தின் கையளித்தார். இந்த நிகழ்வில் சீன தூதர அதிகாரிகள், தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருபாகரன்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
The post சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சீன பதில் தூதர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சீன பதில் தூதர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
