எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு!

14 view
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 35வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் (24) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு,  அமரர்.யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் துணைவியார் இலட்சுமி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும்,புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினருமான ராஜேந்திரம் செல்வராஜா உள்ளிட்டோர்  எம்.ஜி.ஆர்  சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் அமரர். யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர்,எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள், பொதுமக்கள், கல்வியங்காடு சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
The post எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース