லங்கா சதொசவில் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
24 view
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில், 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலை 285 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 185 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 374 ரூபாவாகவும், குறைக்கப்பட்டுள்ளது. 425 கிராம் உள்நாட்டு டின் மீன் ஒன்றின் விலை 475 ரூபாவாகவும், மிளகாய்த்தூள் கிலோகிராம் ஒன்றின் விலை ஆயிரத்து 780 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தாய் நெத்தலியின் விலை ஆயிரத்து 100 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
The post லங்கா சதொசவில் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லங்கா சதொசவில் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
