வசந்த முதலிகே வைத்தியசாலையில் அனுமதி!

6 view
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே இன்று (வெள்ளிக்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வசந்த முதலிகே கடந்த ஒகஸ்ட் 19ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வசந்த முதலிகேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
The post வசந்த முதலிகே வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース