யாழ் பல்கலையில் மொழிபெயர்ப்புக் கற்கைப் பீடத்தின் Translation Day கண்காட்சி!
21 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புக் கற்கைப் பீடத்தின் ஏற்பாட்டில் Translation Day – 2022 இனை முன்னிட்டு கண்காட்சி இன்றைய தினம்(22) நடைபெற்றிருந்தது. இக்கண்காட்சி நிகழ்வானது, பேராசிரியர் எஸ்.சத்குணராஜா தலைமையில், யாழ்.பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் பி.பி 2.00 மணிவரை இடம்பெற உள்ளது. இங்கு பல தரப்பட்ட புத்தகங்கள் வெளியீடு செய்யபப்பட்டு கண்காட்சியில் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை பாடசாலை மாணவர்கள் வருகை தந்து பார்வையிட்டு வருகிறார்கள். மேலும், இந் நிகழ்வில் பேராசிரியர் சுதாகர், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பொது இயக்குனர் பிரசாத் ஹேரத்,கே.சனோஜி ருவினிகா பெரேரா,.ஷமிந்த மகாலேகம், திருநாவுக்கரசு மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
The post யாழ் பல்கலையில் மொழிபெயர்ப்புக் கற்கைப் பீடத்தின் Translation Day கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பல்கலையில் மொழிபெயர்ப்புக் கற்கைப் பீடத்தின் Translation Day கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
