லங்கா பிரீமியர் லீக்: ஹசரங்கவின் ஹெட்ரிக்- பிளெட்சரின் அபார சதத்தால் கண்டி அணி அபார வெற்றி!
6 view
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், கண்டி பெஃல்கன்ஸ் அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தரில் அபார வெற்றிபெற்றது. ஹம்பாந்தோட்டையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இப்போட்டியில், கண்டி பெஃல்கன்ஸ் அணியும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி பெஃல்கன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே பிளெட்சர் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். கொழும்பு அணியின் பந்துவீச்சில், சீக்குகே பிரசன்ன 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 14.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்களுக்கு சுருண்டது.…
The post லங்கா பிரீமியர் லீக்: ஹசரங்கவின் ஹெட்ரிக்- பிளெட்சரின் அபார சதத்தால் கண்டி அணி அபார வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லங்கா பிரீமியர் லீக்: ஹசரங்கவின் ஹெட்ரிக்- பிளெட்சரின் அபார சதத்தால் கண்டி அணி அபார வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
