யாழில் கரப்பான்பூச்சி வடை கடைக்கு சீல்!
16 view
கடந்த ஞாயிற்றுகிழமை 04.12.2022 யாழ்ப்பாணம் வண்ணை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்ட நபர், இது தொடர்பில் யாழ். நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இற்கு முறைப்பாடு செய்தார். உடனே குறித்த உணவகத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் கடையினை பரிசோதனை செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றைய தினமும் மாநகர சுகாதார வைத்திய அதிகாரியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையினை பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். இதன் போது பல சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டது. அத்துடன் குறித்த கடையிற்கு வடை தயாரித்து வழங்கும் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சமையற்கூடமும் பரிசோதனை செய்யப்பட்டது. குறித்த சமையற்கூடமும் சுகாதார சீர் கேட்டுடன் இயங்குவது பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ். நகர பொது சுகாதார…
The post யாழில் கரப்பான்பூச்சி வடை கடைக்கு சீல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கரப்பான்பூச்சி வடை கடைக்கு சீல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
