இலங்கையில் முடிவுக்கு வந்த முட்டை விலை..! எவ்வளவு தெரியுமா?
7 view
முட்டையின் விலை தொடர்பில் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பண்டிகை காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் தெளிப்படுத்தும் போதே அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முட்டையின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முட்டையின் விலை 80 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. இது தொடர்பில் எனக்கு தகவல்கள் கிடைக்கவில்லை. வழமையாக பண்டிகை காலங்களில் முட்டைகளின் விலை அதிகரித்து காணப்படும். ஆனால் பாரியளவில் அதிகரிக்காது. நாட்டில் கேள்விகளுக்கு ஏற்ப முட்டைகள் காணப்படுகின்றன. மேலும் முட்டைகளுக்கு நிர்ணய விலை காணப்படுகிறது. குறித்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும். இருப்பினும் நிர்ணய விலை காரணமாக முட்டை உற்பத்தி குறைவடைந்துள்ளது. உற்பத்தியாளர்கள் முட்டைகளைச் சந்தைக்கு விற்பனை செய்வது…
The post இலங்கையில் முடிவுக்கு வந்த முட்டை விலை..! எவ்வளவு தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் முடிவுக்கு வந்த முட்டை விலை..! எவ்வளவு தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
