டீசல் விலை ரூ.10 ஆல் குறைப்பு
23 view
கொழும்பு,டிச 05 இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, தற்போது 430 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசல் இன்று நள்ளிரவு முதல் 420 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 4,360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு…
The post டீசல் விலை ரூ.10 ஆல் குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டீசல் விலை ரூ.10 ஆல் குறைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
