ஷானி அபயசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு
13 view
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்கு தேவையான அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஷானி அபேசேகரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடுமாறு கோரி ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (05) அழைக்கப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். மனுதாரர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார். மேலும், வீட்டின் பாதுகாப்புக்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ஷானி அபயசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஷானி அபயசேகரவிற்கு பொலிஸ் பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
