முதல் ஒருநாள் போட்டி: பங்களாதேஷிடம் இந்தியா தோல்வி!
7 view
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. டாக்கா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, 41.2 ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ராகுல் 73 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும் எபொட் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 187 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 46 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள்…
The post முதல் ஒருநாள் போட்டி: பங்களாதேஷிடம் இந்தியா தோல்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதல் ஒருநாள் போட்டி: பங்களாதேஷிடம் இந்தியா தோல்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
