சாவகச்சேரி வேம்பிராய் பொது மயானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.
27 view
சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட வேம்பிராய் பொது மயானத்தில் புதிய எரிகொட்டகை மற்றும் உள்ளக வீதி என்பன அமைக்கப்படவுள்ளது. சாவகச்சேரி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 20 லட்சம் ரூபாவில் மீசாலை சுடரொளி சனசமூக நிலையத்தினூடாக குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதற்கான கள ஆய்வுப்பணிகளை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் க.வாமதேவன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் அ.பாலமயூரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தனுஷன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளோடு இணைந்து இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்.
The post சாவகச்சேரி வேம்பிராய் பொது மயானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரி வேம்பிராய் பொது மயானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
