மட்டக்களப்பு-கிரான் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

8 view
மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்இன்று (27) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நல்லராசா நேசராசா என்ற ஆ6 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கரை வலை மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தில் முறக்கொட்டான்சேனை பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் இயந்திரத்தில் சென்ற நிலையில் பிரதான வீதியில் இருந்து குறுக்கு வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்பும் போது பின்னால் வந்த கார் உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கார் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தில் இருந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். காரில் பயணித்தவர்கள் களுதாவளை ஆலயத்திற்கு பூஜை ஒன்றுக்க வந்துள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. காரின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்…
The post மட்டக்களப்பு-கிரான் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース