ஸ்ரீ தலந்த மாளிகைக்கு நிவாரணம்
7 view
கண்டி,நவ 27 வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலந்த மாளிகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான மின்சாரக் கட்டணமான 27 இலட்சம் ரூபாவை செலுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, மத வழிபாட்டுத் தலங்களில் சுமார் 50% மின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. தலந்த மாளிகையின் கடந்த மாதத்திற்கான மின்சாரக் கட்டணம் 13 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தியவதன நிலமே தெரிவித்தார்.
The post ஸ்ரீ தலந்த மாளிகைக்கு நிவாரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்ரீ தலந்த மாளிகைக்கு நிவாரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
