78 வயதில் செய்த சேட்டை – பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ‘ஸ்குவிட் கேம்’ நடிகர்!
13 view
பெண் அளித்த புகாரை தொடர்ந்து, 78 வயதான தென்கொரிய நடிகர் ஓ யோங்-சு மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரபலமான தொடரான ‘ஸ்குவிட் கேம்’-இல் நடித்தவரும், தென் கொரிய நாட்டைச் சேர்ந்தவருமான ஓ யோங்-சு மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில், தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 78 வயதான ஓ யோங்-சு ஸ்குவிட் கேம் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். இந்த விருதை பெற்ற முதல் தென் கொரிய நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். அந்த வகையில், தற்போது இவர் மீதான பாலியல் வழக்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் ஓ யோங்-சு மீது குற்றஞ்சாட்டி அந்த பெண், கடந்தாண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த வழக்கு கடந்த…
The post 78 வயதில் செய்த சேட்டை – பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ‘ஸ்குவிட் கேம்’ நடிகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 78 வயதில் செய்த சேட்டை – பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ‘ஸ்குவிட் கேம்’ நடிகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
