மின்சாரம், எரிசக்தி, நீர் வழங்கல் அமைச்சுக்கள் தொடர்பான செலவின தலையீடுகள் மீதான விவாதம் இன்று!
13 view
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 03வது நாள் விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறுகிறது. மின்சாரம், எரிசக்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கள் தொடர்பான செலவின தலையீடுகள் குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்கள் தொடர்பான செலவின தலைப்புகள் மீது விவாதம் நடத்தப்பட்டது. இதன்போது பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட, வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
The post மின்சாரம், எரிசக்தி, நீர் வழங்கல் அமைச்சுக்கள் தொடர்பான செலவின தலையீடுகள் மீதான விவாதம் இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்சாரம், எரிசக்தி, நீர் வழங்கல் அமைச்சுக்கள் தொடர்பான செலவின தலையீடுகள் மீதான விவாதம் இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
