ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபக தலைவர் தோழர் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம்!
17 view
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபக தலைவர் தோழர் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம் நேற்று (சனிக்கிழமை) மன்னாரில் நினைவு கூறப்பட்டது. மன்னாரில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சந்திரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மத்திய குழு ,உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள்,முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
The post ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபக தலைவர் தோழர் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபக தலைவர் தோழர் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.