இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர் உணவு உதவிகளை வழங்குவதாக உறுதியளிப்பு!

19 view
இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள 40 மில்லியன் டொலர் பெறுமதிமிக்க உணவு உதவிகளுக்கு மேலதிகமாக, மேலும் 20 மில்லியன் டொலர் பெறுமதியுடைய உணவு உதவிகளை வழங்குவதாக உலக உணவு திட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளது. அதாவது,பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் உலக உணவு திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜோன் அயிலீஃப் உள்ளிட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் போது உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்காக போஷாக்குள்ள உணவை வழங்குவதற்காக மேலதிக உதவிகளை வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உலக உணவு திட்ட அதிகாரிகள் தமது விருப்பத்தினை வெளிப்படுத்தினர். உலக உணவு திட்டம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கிடையில் பேணப்படும் சிறந்த பங்காளித்துவமானது பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குதல் மற்றும் திரிபோஷா போன்ற தமது…
The post இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர் உணவு உதவிகளை வழங்குவதாக உறுதியளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース