இம்முறையும் சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை ஐ.நா. கொடுக்கும்! – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ
10 view
கேள்வி: இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர்களின் பிரச்சினைகள், இறுதிப்போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கரிசனை காட்டப்படுமா? அல்லது தென்னிலங்கையில் தற்போது இடம்பெறும் கைதுகள், கருத்துச் சுதந்திர ஒடுக்குதல்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவை அதிகளவு அக்கறை செலுத்துமா? எதற்கு வாய்ப்பு அதிகம்? பதில்: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விவகாரம் ,பிரிவு 2இன் கீழ் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி தமிழர்களின் இனவழிப்பை மூடிமறைக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. அந்தவகையில் இந்தக் கூட்டத்தொடரில் , சிறிலங்காவில் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி, காலிமுகத்திடல் போராட்டம் , அதை அடக்கும் விதமாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பவற்றைப் பூதாகரமாக்கி தமிழின அழிப்பை மூடிமறைக்கும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கமும் சிங்கள சிவில் அமைப்புகளும் ஐ.நா. வில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன. அந்தவகையில் காலிமுகத்திடலில் தனிநபர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் குறித்த 850 மேற்பட்ட அறிக்கைகளை ஐ.நா .மனித…
The post இம்முறையும் சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை ஐ.நா. கொடுக்கும்! – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இம்முறையும் சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை ஐ.நா. கொடுக்கும்! – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
