தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பைடன்: மாணவர்களுக்கு கல்விக் கடனில் 10,000 டொலர்கள் தள்ளுபடி!

6 view
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவர்கள் வாங்கிய கல்விக் கடனில் 10,000 டொலர்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் படிக்கும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் தவித்துவருகின்ற நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கல்விக் கடன் பெற்ற ஒவ்வொரு வருக்கும் 50,000 அமெரிக்க டொலர்கள் அளவுக்கு தள்ளுபடி அளிக்க வேண்டும் என ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், 10,000 டொலர்களை தள்ளுபடி செய்வதாக பைடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களுக்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும். அதிக வருவாய் உள்ள மக்களுக்கு இத்திட்டம் பயன் அளிக்காது. கடந்த ஆட்சியில், பணக்காரர்கள் பயன் பெறும் வகையில் 2 ட்ரில்லியன் மதிப்பிலான வரிச்சலுகைக் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு…
The post தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பைடன்: மாணவர்களுக்கு கல்விக் கடனில் 10,000 டொலர்கள் தள்ளுபடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース