யாழில் வீட்டுத்தோட்ட செயற்றிட்டத்துக்கு 10 லட்சம் ரூபா!
15 view
ஐ.நா வளர்ச்சித் திட்டத்தின் என்.டி.பி 10 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டுடன் 56 பெண் பயனாளிகளுக்கான வீட்டுத்தோட்ட செயற்றிட்டம் வலி.தென்மேற்குப் பிரதேசசபையின் மகளிர் உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது . வலி தென்மேற்குப் பிரதேசசபையின் 28 வட்டாரங்களிலிருந்தும் வீட்டுத்தோட்ட செய்கையில் ஆர்வமுள்ள 2 பெண் பயனாளிகள் வீதம் 56 பயனாளிகள், வட்டார உறுப்பினர்கள் மற்றும் வட்டார உத்தியோகத்தர்களால் தெரிவுசெய்யப்பட்டு சபையின் மகளிர் உறுப்பினர்களின் மேற்பார்வையின் அடிப்படையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது . செயற்றிட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட 10 லட்சம் ரூபா நிதியில் 3 லட்சம் ரூபா வீட்டுத்தோட்ட உப கரணங்களுக்கும் , 2 லட்சம் ரூபா விற்பனை நிலையங்களை அமைத்தல் , துண்டுபிரசுரங்களுக்கும் மிகுதியான நிதி பயிற்சி மற்றும் இணைச் செயற்றிட்டங்களுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது . பிற செய்திகள்
The post யாழில் வீட்டுத்தோட்ட செயற்றிட்டத்துக்கு 10 லட்சம் ரூபா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீட்டுத்தோட்ட செயற்றிட்டத்துக்கு 10 லட்சம் ரூபா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
